Saturday, July 25, 2009

தமிழனின் நிலை

நீ புலம்பெயர்ந்த தமிழனா?
இடம் புலம்பெயர்ந்த தமிழனா?
புலம்பெயர்ந்த தமிழன் எனின்
தொலைக்காட்சியில் பிணம்
காண்பாய்.
இடம் புலம்பெயர்ந்த தமிழன் எனின்
பிணத்துடன் இரண்டறக்
கலப்பாய்.
ஏனோ இதுதான் எம் நிலை
இலங்கை தமிழனின் நிலை.

நீரும் எதிர்கால சவாலும்


சனத்தொகை அதிகரித்து செல்லும் போது நீரின் தேவையும் அதிகரிக்கும். விவசாயத்திற்கும், குடிப்பதற்குமான நீர் தட்டுப்பாடாக கிடைக்கும் போது அது பாரதூரமான விளைவை தோற்றுவிக்கும். குடிநீர் மாசடையும் போது நோய்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும். விவசாயத்திற்கு போதியளவு நீர் கிடைக்காது விட்டால் உணவு உற்பத்தி வீழ்ச்சியடைந்து நாட்டில் பஞ்சம் ஏற்பட இடமுண்டு.நீரை வீணாக விரையம் செய்தலைத் தவிர்க்க வேண்டும். காலநிலை மாற்றத்துக்கான சூழலை மாசுபடுத்தும் நடவடிக்கைகளை கைவிட்டு சூழலை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடல் வேண்டும். இதற்கு இயற்கை காடுகளை பேணி வருவதுடன் புதிய காடுகளை அமைத்து சூழல் மாசடைதலை தடுத்தல் வேண்டும். இதற்கு செயற்கை பசளை பாவனையை குறைத்து இயற்கை பசளை வகைகளை பயன்படுத்த வேண்டும். மேலும் நீர்நிலைகள் மாசுபடாத வகையில் கழிவுகள் அகற்றப்படல் அவசியம்.எதிர்காலத்தில் நீர் சேமிப்பு திட்டம் ஒன்றை வகுத்து செயற்படுத்துவதுடன், மழை நீரை சேகரித்து பயன்படுத்தும் நடைமுறைகளை பின்பற்றி நீருக்கான எதிர் கால சவால்களை வெற்றி கொள்வது எமது கைகளில் தங்கியுள்ளது.எனவே நீரின் அவசியத்தினை உணர்ந்து செயற்பட்டால் நீர்ச்சவாலை வெற்றிகரமாக எதிர் கொள்ள முடியும்.

Tuesday, July 14, 2009

கடலில் மூழ்கவுள்ள நியூ ஒறிலண்ட்




அமெரிக்காவின் நியூ ஒறிலண்ட் மாநிலத்தின் லூசியானா பகுதியில் பெரும்பாலான கடற்கரைப் பகுதியை கடல் ஆட்கொள்ளவுள்ளதாக புவியியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். கடல் மட்ட அதிகரிப்பு இதற்கு பிரதான காரணமாகும் புவி வெப்பமாதல் வேகம் அதிகரித்து வரும் நிலையில் துருவப்பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. இதுவே அதிகரித்த வேகத்திலான கடல் மட்டம் உயரக்காரணமாகியுள்ளது. இதே வேகத்தில் கடல் மட்டம் அதிகரித்தால் இந்நூற்றாண்டின் இறுதியுடன் லூசியானாவில் பெரும் பகுதி கடலால் மூடப்படும். 10000 - 13500 சதுர கிலோமீற்றர் பரப்பளவுள்ள பகுதி கடலில் மூழ்கிவிடும் நிலையில் உள்ளது. இது இந்நூற்றாண்டின் இறுதியில் எதிர்பார்க்கப்படுவதாகவும் ஆனாலும் கடல் மட்டம் அதிகரிப்பு எதிர்பார்த்த்தை விட அதிகமாக இருப்பதால் விரைவில் இது நிகழலாம் என புவியியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Thursday, July 9, 2009

பரங்கிக்காயின் மருத்துவம்


உடலுக்கு வீரியத்தை ஊட்டி இதயத்திற்கு வலுவைக்கூட்டும் பரங்கிக்காயானது நீர் இளக்கும் தன்மையானது. பித்ததை கட்டுப்படுத்தி சிறுநீரக கோளாறுகளை நீக்கு கின்றது. உலகமெங்கும் பயன்படுத்தும் இந்தக்காயை கெடாமல் பாதுகாக்கலாம். வேறெந்தக்காயிலும் இல்லாதளவுக்கு விற்றமின் B உள்ளது. விசத்தை முறிக்கும் சக்தி இக்காயின் சாற்றில் உள்ளது.

அடங்கியுள்ள சத்துக்கள்

நீர் - 92.6 %

புரோட்டீன் - 1.4 %

கொழுப்பு - 0.1%

காபோவைதரேட் - 5.3 %

தாதுக்கள் - 0.6 %

கல்சியம் - 0.01 %

Wednesday, July 8, 2009

சிரிக்கும் தும்பிகள்


  • கிராமப்புறங்களில் பொதுவாக தட்டான் பூச்சி என்றும் நகரப்பகுதிகளில் தும்பி என்றும் கூறப்படும் பூச்சிகள் அவைகளுக்குரிய சிறிய முகத்தில் புன்னகை பூக்குமாம்.
  • பிரிடனைச் சேர்ந்த ஒருவர் தனது போனில் தட்டான் பூச்சியை படம் பிடித்து அதனை ஆய்வு செய்த ஆய்வு நிலையம் அதன் சிரிபை உறுதிபடுதியுள்ளது. இந்த பூச்சியின் வாய்ப்பகுதிக்கு மேல்புறம் தலையில் உள்ள ஃப்ரான்ச் என்ற இடத்திலிருந்து மகிழ்ச்சி தோன்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • பொதுவாக தோட்டங்களை ஒட்டியுள்ள குளங்களில் 20-30 வரை இந்த வகை தும்பிகள் காணப்படும் என்பதால் அதிக எண்ணிகையில் அவை இருக்க்கூடும் என அந்த ஆய்வு அமைப்பு தெரிவிக்கின்றது




Saturday, July 4, 2009

பூமி அதிர்ச்சியை முன்ன்றிவிக்க........ முடியும் என்கிறது நாசா






  • பூமி அதிர்ச்சியை முன்ன்றிவிக்க கூடிய தொழில்நுட்பத்தை கண்டறிவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
  • விண்ணில் பறக்கும் செயற்கை கோள்களின் துணையுடன் பூமியின் வளிமண்டல்தில் உள்ள அயன் படையில் நிகழும் குழப்பங்களை அவதானிப்பதன் அடிப்படையில் பூமி அதிர்ச்சியை எதிர்வு கூறமுடியும் என்று விஞ்ஞானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்
  • பூமி அதிர்ச்சி ஏற்படுவதற்கு முன்னர் வளிம்டலத்தில் உள்ள அயன் படையில் பாரிய குழப்பங்கள் நிகழ்வது தொடர்ச்சியாக நாசா விஞ்ஞானிகளால் அவானிக்கப்பட்டு வந்திருக்கின்றது. கடந்த வருடம் நிகழ்ந்த பூமி அதிர்ச்சிக்கு முன்னரும் கூட வளிமண்டல அயன் படையில் முன்னர் அவதானிக்கப்பட்டது போன்ற குழப்பங்கள் நிகழ்ந்திருக்கின்றன. என்று அவர்கள் தாங்கள் திரட்டிய தரவுகளை ஆதாரம் காட்டி செய்தி வெளியிட்டுள்ளனர்.
  • பூமியோட்டில் உள்ள பாறைப் படைகளில் ஏற்படும் மின்அழுத்த மாற்றங்கள் வளிமண்டல அயன் படையில் தூண்டும் குழபங்களும் அவற்றை தொடர்ந்து ஏற்படும் பூமி அதிர்ச்சிகளுக்கும் இடையே தொடர்புகள் இருப்பது அவதானிக்கப்பட்டதன் அடிப்படையிலேயே நாசா விஞ்ஞானிகள் இந்த நம்பிக்கையை வெளியிட்டுள்ளனர்.
  • எது எப்படியோ... பூமி அதிர்ச்சியை எதிர்வு கூறும் தொழில்நுட்பம் வளர்ந்ததால் பூமி அதிர்ச்சியால் ஏற்படும் மனிதப்பேரவலங்களை தடுக்கும் வாய்ப்புக்கள் அதிகரிக்கும் என்பதை நிச்சயமாக கூறலாம்.

Friday, July 3, 2009

அகதிகள்

விண் உடைந்து வருவாயா?
ஆண்டா?
விம்மி அழும் மனித குல துயர்களை போக்கிட.
மனிதம் மதித்த மண்ணில்
அகதிகள் ஏறாளம்கண்ணீர் துடைக்க வருவாயோ?
இல்லை நீயும் இங்கு பொய்தானோ?
கண்ணை இழந்தான் கணவன்
காலை இழந்தான் காளை
பிள்ளை இழந்தார் பெற்றோர்
சேற்றில் கிடந்தான் தந்தை
தலை இழந்தான் தமையன்
சீரழிந்தாள் தங்கை
செத்து போக சிறையில்
மறைந்த என் உறவுகள் எத்தனையோ?
இவை கண்டு ஆண்டவா
ஓடி ஒழிந்து விட்டாயோ?
நீ என்ன வெறும் கல்தானோ?
உயிர் இழந்து போக
மண்ணை இழந்து
பொன்னை இழந்து
வீடு இழந்து
வேண்டிய சொத்திழந்து
மானம் இழந்து மனதிலே அமைதி இழந்து
உயிர் இருந்தும்
உணர்விருந்தும்
நடைப்பிணங்களாய் மிச்சப்பேர்
தகரக் கொட்டலில் இங்கே.
அகதி முகாம்களில்
ஆண்டவா அல்லலூறும்
என்குலம் வாழ
அருள் தந்திடு இல்லையோ
என்னையும் சேர்த்து
என் குலம் தன்னை மொத்தமாய்
அழித்திடு