skip to main |
skip to sidebar
பூமி அதிர்ச்சியை முன்ன்றிவிக்க........ முடியும் என்கிறது நாசா


- பூமி அதிர்ச்சியை முன்ன்றிவிக்க கூடிய தொழில்நுட்பத்தை கண்டறிவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
- விண்ணில் பறக்கும் செயற்கை கோள்களின் துணையுடன் பூமியின் வளிமண்டல்தில் உள்ள அயன் படையில் நிகழும் குழப்பங்களை அவதானிப்பதன் அடிப்படையில் பூமி அதிர்ச்சியை எதிர்வு கூறமுடியும் என்று விஞ்ஞானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்
- பூமி அதிர்ச்சி ஏற்படுவதற்கு முன்னர் வளிம்டலத்தில் உள்ள அயன் படையில் பாரிய குழப்பங்கள் நிகழ்வது தொடர்ச்சியாக நாசா விஞ்ஞானிகளால் அவானிக்கப்பட்டு வந்திருக்கின்றது. கடந்த வருடம் நிகழ்ந்த பூமி அதிர்ச்சிக்கு முன்னரும் கூட வளிமண்டல அயன் படையில் முன்னர் அவதானிக்கப்பட்டது போன்ற குழப்பங்கள் நிகழ்ந்திருக்கின்றன. என்று அவர்கள் தாங்கள் திரட்டிய தரவுகளை ஆதாரம் காட்டி செய்தி வெளியிட்டுள்ளனர்.
- பூமியோட்டில் உள்ள பாறைப் படைகளில் ஏற்படும் மின்அழுத்த மாற்றங்கள் வளிமண்டல அயன் படையில் தூண்டும் குழபங்களும் அவற்றை தொடர்ந்து ஏற்படும் பூமி அதிர்ச்சிகளுக்கும் இடையே தொடர்புகள் இருப்பது அவதானிக்கப்பட்டதன் அடிப்படையிலேயே நாசா விஞ்ஞானிகள் இந்த நம்பிக்கையை வெளியிட்டுள்ளனர்.
- எது எப்படியோ... பூமி அதிர்ச்சியை எதிர்வு கூறும் தொழில்நுட்பம் வளர்ந்ததால் பூமி அதிர்ச்சியால் ஏற்படும் மனிதப்பேரவலங்களை தடுக்கும் வாய்ப்புக்கள் அதிகரிக்கும் என்பதை நிச்சயமாக கூறலாம்.
No comments:
Post a Comment